353 மையங்களில் வாக்காளர்கள் அடையாளம் காண பல வர்ண குறியீடு
353 மையங்களில் வாக்காளர்கள் அடையாளம் காண பல வர்ண குறியீடு
ADDED : ஏப் 22, 2026 06:39 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 6 தொகுதிகளில் உள்ள 353 மையங்களில், வாக்காளர்கள் எளிதில் கண்டறிய பல வர்ணங்களில் குறியீடு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 தொகுதிகளில் 4,016 ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று ஓட்டுப்பதிவு துவங்குகிறது. அவற்றில், ஒரே இடத்தில், 10க்கும் மேற்பட்ட மையங்களில், வாக்காளர்கள் தங்களது மையத்தை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஆறு தொகுதிகளில் 353 மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில், 2,86,029 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.
இந்த 27 மையங்களிலும், பல வர்ணத்தில் தனித்தனி வழிகாட்டு குறியீடுகள் பொருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடி எண் மற்றும் அதன் வழி விபரம் எழுதப்பட்ட பதாகைகள், ஓட்டு மையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, வாக்காளர்கள் தங்கள் ஓட்டுச் சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு ஓட்டளிக்க மிகவும் உதவிகரமாக அமையுமென, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதாப் தெரிவித்தார்.
