/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியான அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
/
பல்லாங்குழியான அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
ADDED : டிச 08, 2024 02:43 AM

திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு நெடுஞ்சாலையில் உள்ளது ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிபேடு. அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த ஊராட்சி வழியாக குத்தம்பாக்கம், நேமம் வழியாக திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இணைப்பு சாலை வழியே செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது.
இதனால் இவ்வழியே வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதோடு சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் விபத்தில் சிக்குகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ள இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.