ADDED : பிப் 01, 2026 06:58 AM

ஆர்.கே.பேட்டை: கட்டி முடித்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பல்நோக்கு அறையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுாரில், திரவுபதியம்மன் கோவில் எதிரே பெரிய குளக்கரையை ஒட்டி, பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 12 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தை ஒட்டி மின்கம்பி உரசிக்கொண்டுள்ளது. இதற்காக, தற்காலிகமாக சவுக்கு கட்டை வைத்து மின்கம்பியை விலக்கி வைத்துள்ளனர். அருகில் உள்ள பெரிய குளக்கரையி ல் காரியமேடை அமைந்துள்ளது. இங்கு இறுதி சடங்கு நடத்துபவர்கள் வசதிக்காக, இந்த பல்நோக்கு கட்டடத்தில் குளியலறை கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை பகுதிமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படவில்லை.
இந்த பல்நோக்கு கட்டடத்தை விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அந்த கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பியை பாதுகாப்பாக கொண்டு செல்லவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
