/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம்
/
நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம்
ADDED : டிச 21, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், குடியிருப்பு, வணிக வளாகங்களுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் ஆகியவை நகராட்சிநிர்வாகம் வசூலிக்கிறது. இதற்காக, நகராட்சி அலுவலகத்தில், காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, கணினி வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், tnurbanpay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கண்ட வரிகளை செலுத்தி, அபராதம், வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கலாம் என, நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தி உள்ளார்.