/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் வடிகால்வாய் அமைக்க நிதிக்காக காத்திருக்கும் நகராட்சி
/
மழைநீர் வடிகால்வாய் அமைக்க நிதிக்காக காத்திருக்கும் நகராட்சி
மழைநீர் வடிகால்வாய் அமைக்க நிதிக்காக காத்திருக்கும் நகராட்சி
மழைநீர் வடிகால்வாய் அமைக்க நிதிக்காக காத்திருக்கும் நகராட்சி
ADDED : பிப் 01, 2025 09:49 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 470 தெருக்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. மேலும் பல தெருக்களில் அமைத்த கால்வாய்கள் புதைந்தும், பழுதடைந்தும் உள்ளன. இதனால், மழை பெய்யும் போது, மழைநீர், வார்டுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதுதவிர கால்வாய் புதைந்து உள்ளதால், மழை பெய்யும் போது, மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெரு மற்றும் சாலைகளில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், அனைத்து வார்டுகளிலும், மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளன.
இதுகுறித்து, திருத்தணி நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:
நகராட்சியில், 21 வார்டுகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க தீர்மானித்து, இரு மாதங்களுக்கு முன், 8.06 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என, நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம்.
நிதி ஒதுக்கீடு செய்தால், மூன்று மாதத்திற்குள் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.