/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்த நகராட்சி அனுமதி
/
பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்த நகராட்சி அனுமதி
பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்த நகராட்சி அனுமதி
பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்த நகராட்சி அனுமதி
ADDED : பிப் 20, 2025 09:49 PM
திருவள்ளூர்:பெரியகுப்பம் பேருந்து நிலைய காலியிடத்தில், தனியார் வாகன நிறுத்துமிடம் அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சி கூட்டம், தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நகராட்சி தலைவர் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம்:
'பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில், தனியார் நிறுவன வேன்கள், மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், பேருந்துகள் இயக்கத்திற்கு இடையூறாகவும், நிர்வாக சீர்கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே, இதை தவிர்க்கும் வகையில், மேற்படி பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில், இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரரே இருசக்கர வாகன நிறுத்தும் இடத்திற்கு தேவையான கூரை அமைத்து, நகராட்சிக்கு தரை வாடகை மட்டும் செலுத்தலாம்.
இவ்வாறு அதில் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, நகராட்சி கூட்டத்தில் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், கூட்டத்தில், 27வது வார்டு பகுதியில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டதால், அதற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட மண் சாலையை, நகராட்சி சாலை பதிவேட்டில் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

