/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீணாகும் ஆட்டிறைச்சி கூடம் ரூ.37 லட்சம் வரிப்பணம் 'அம்போ'
/
வீணாகும் ஆட்டிறைச்சி கூடம் ரூ.37 லட்சம் வரிப்பணம் 'அம்போ'
வீணாகும் ஆட்டிறைச்சி கூடம் ரூ.37 லட்சம் வரிப்பணம் 'அம்போ'
வீணாகும் ஆட்டிறைச்சி கூடம் ரூ.37 லட்சம் வரிப்பணம் 'அம்போ'
ADDED : நவ 28, 2024 12:40 AM

திருவள்ளூர்:திருமழிசை --- ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள சுடுகாடு அருகே, 2012ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆட்டிறைச்சிக் கூடம் கட்டப்பட்டது.
இதன் வாயிலாக திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு, 11 ஆண்டுகளாகியும், நவீன இயந்திரங்கள் இல்லாமல் பயன்பாட்டிற்கு வராததால், புதர் போல வளர்ந்திருந்தன..
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் ஆட்டிறைச்சிக் கூடத்தை, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் வகையில் 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சீரமைக்கப்பட்டு இரு ஆண்டுகளாகியும், ஆட்டிறைச்சிக் கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
இதனால் மக்கள் வரிப்பணம் 37 லட்சம் ரூபாய் வீணாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், ஆட்டிறைச்சிக் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, திருமழிசை பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.