/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓரம் கட்டப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு நாகபூண்டி பகுதிவாசிகள் அதிருப்தி
/
ஓரம் கட்டப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு நாகபூண்டி பகுதிவாசிகள் அதிருப்தி
ஓரம் கட்டப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு நாகபூண்டி பகுதிவாசிகள் அதிருப்தி
ஓரம் கட்டப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு நாகபூண்டி பகுதிவாசிகள் அதிருப்தி
ADDED : மே 28, 2025 02:08 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில் அமைந்துள்ளது நாகவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில். ராகு பரிகார ஸ்தலமான இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சின்னநாகபூண்டியில் இருந்து பெரிய நாகபூண்டிக்கு இணைப்பு சாலை உள்ளது.
பேருந்தில் சின்னநாகபூண்டிக்கு வரும் பக்தர்கள், அங்கிருந்து நடந்து கோவிலுக்கு செல்கின்றனர். கோவிலுக்கு செல்லும் பாதையில் நுழைவாயில் அலங்கார வாயிலை ஒட்டி, உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து செயல்படாமல் கிடந்தது.
இதை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் யாரும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், தற்போது அந்த பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பயனின்றி கிடந்த உயர்கோபுர மின்விளக்கும் அங்கிருந்து அடியோடு அகற்றப்பட்டு விட்டது. அகற்றப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கம்பம், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்விளக்கு கம்பம் மீண்டும் சீரமைத்து பொருத்தப்படுமா அல்லது பழைய நிலையே தொடருமா என்ற கேள்வி பகுதிவாசிகளிடையே எழுந்துள்ளது.