/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாசடைந்து நிறம் மாறும் நாகராஜகண்டிகை நீரோடை
/
மாசடைந்து நிறம் மாறும் நாகராஜகண்டிகை நீரோடை
ADDED : ஜன 08, 2026 06:33 AM
கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலைகளின் கழிவுநீர் திறந்துவிடப்படுவதால், நிறம் மாறி வரும் நாகராஜகண்டிகை நீரோடையை பாதுகாக்க நடவடிக்கை எடுக் க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்புக்கு, அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், நாகராஜகண்டிகை கிராம எல்லையில், ஏரிகளுக்கான நீரோடை செல்கிறது. கால்நடைகளின் பயன்பாட்டில் உள்ள இந்த நீரோடை, தற்போது கருமை நிறத்தில் மாறி, மாசடைந்து வருகிறது.
இந்த நீரோடையின் கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் நீரோடையில் திறந்துவிடப்படுவதால், ஓடை நீர் மாசடைந்து வருவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீரோடை தண்ணீரை ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பி, விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வே ண்டும்.
அடுத்தடுத்த நீர்நிலைகள் மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டருக்கு, கிராம மக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

