/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகரி தேசம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
நகரி தேசம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : பிப் 13, 2024 06:33 AM

நகரி: சித்துார் மாவட்டம், நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகை கிராமத்தில் உள்ள, தேசம்மன் கோவில், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்தது.
இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த, 5ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுபாபு, செயல் அலுவலர் ராமச்சந்திராரெட்டி ஆகியோர் பங்கேற்று துவங்கி வைத்தனர்.
இதற்காக கோவில் வளாகத்தில், 7 யாகசாலைகள், 1,008 கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா, அவரது கணவர் செல்வமணி, கோவில் சேர்மன் வேணுபாபு, செயல் அலுவலர் ராமச்சந்திரரெட்டி மற்றும் முக்கிய பிரமுகவர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வேணுபாபு மற்றும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.