/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியம்பாக்கம் ஊராட்சி செயலர், திட்ட ஒருங்கிணைப்பாளர் 'சஸ்பென்ட்
/
நந்தியம்பாக்கம் ஊராட்சி செயலர், திட்ட ஒருங்கிணைப்பாளர் 'சஸ்பென்ட்
நந்தியம்பாக்கம் ஊராட்சி செயலர், திட்ட ஒருங்கிணைப்பாளர் 'சஸ்பென்ட்
நந்தியம்பாக்கம் ஊராட்சி செயலர், திட்ட ஒருங்கிணைப்பாளர் 'சஸ்பென்ட்
ADDED : ஜன 02, 2025 09:19 PM
மீஞ்சூர்:திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில், கடந்த மாதம், மாவட்ட திட்ட அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஊராட்சி நிர்வாகத்தின் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், கடந்த ஆண்டு நுாறு நாள் வேலை திட்டம் தொடர்பான பதிவேடு எண்.3, சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும், பதிவேடு எண்.1, முழுமையாக பராமரிக்கப்படாமல் இருப்பது தெரிந்தது.
இயக்குனர் அவர்கள் வருகையொட்டி பதிவேடுகள் அனைத்தும், முறையாக பராமரிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கி இருந்தது.
ஆனால், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அவை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பது அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது.
மஹாத்மா காந்தி ஊரக வேலை திட்டப் பதிவேடுகள் பராமரிக்கும் முழுப் பொறுப்பு, அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு உள்ளது. இதை ஊராட்சி செயலர் கண்காணிக்க வேண்டும்.
அறிவுறுத்தல்கள் வழங்கியும், மேற்கண்ட ஊராட்சியில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், கடந்த 30ம் தேதி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், நந்தியம்பாக்கம் ஊராட்சி செயலர் பொற்கொடி, 38, அதே ஊராட்சியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஞ்சலை, 37, ஆகிய இருவரையும், தற்காலிக பணி நீக்கம் செய்து, உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

