/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூமி தானமாக வழங்கப்பட்ட நிலம் மீட்டு தரக்கோரி நரிக்குறவர்கள் மனு
/
பூமி தானமாக வழங்கப்பட்ட நிலம் மீட்டு தரக்கோரி நரிக்குறவர்கள் மனு
பூமி தானமாக வழங்கப்பட்ட நிலம் மீட்டு தரக்கோரி நரிக்குறவர்கள் மனு
பூமி தானமாக வழங்கப்பட்ட நிலம் மீட்டு தரக்கோரி நரிக்குறவர்கள் மனு
ADDED : ஜன 30, 2024 12:49 AM
பொன்னேரி : சோழவரம் அடுத்த ஒரக்காடு ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர்கள் நேற்று, தமிழக அரசால் பூமி தானமாக வழங்கப்பட்ட, 45 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், அதை மீட்டு தர கோரியும் பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்திடம் மனு அளித்தனர்.
மனுவில் உள்ளதாவது:
ஒரக்காடு ஊராட்சியில், 60 ஆண்டுகளுக்கு முன் இங்கு வசித்து வந்த எங்கள் முன்னோருக்கு, தமிழக அரசு ஒரு குடும்பத்திற்கு 1 ஏக்கர் என, 45 குடும்பங்களுக்கு, 45 ஏக்கர் நிலம் பூமிதானமாக வழங்கியது.
எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூர்களுக்கு சென்ற சூழலில் சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து, எங்களது நிலங்களைஅபகரித்து விட்டனர்.
இதற்கு அரசு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்து உள்ளனர். தமிழக அரசால் எங்களுக்கு பூமிதானமாக வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் உள்ளது.
சோழவரம் அடுத்த ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனக்கூறி, பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் மனு அளித்தனர்.
மனுவில் உள்ளதாவது:
எங்கள் கிராமத்தில், 85 சென்ட் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு தேவையான அங்கன்வாடி மையம், சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்க இடம் இல்லாமல் தவிக்கிறோம்.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து, அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.