தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவர்கள் தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவர்கள் தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவர்கள் தேர்வு


UPDATED : நவ 27, 2026 06:28 PM

ADDED : நவ 27, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 06:28 PM ADDED : நவ 27, 2026 06:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: மாநில அளவில் நடந்த வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற கும்மிடிப்பூண்டி பகுதி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை, சேத்துப்பட்டில் உள்ள நேரு பூங்காவில், இம்மாதம், 23, 24ம் தேதிகளில், வில்வித்தை போட்டிகள் நடந்தப்பட்டன.

இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 1,200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி ‘டூ அட் எக்ஸ்’ வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவன் கே.ஹர்ஷன், 13, இந்திய வில்வித்தை பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில், முதலிடம் பிடித்தார்.

அதே மையத்தை சேர்ந்த கே.பிரபஞ்சன், 15, என்ற மாணவன், 17 வயதுக்கு உட்பட்ட, ‘ரீக்கர்வ்’ வில்வித்தை பிரிவில், நான்காம் இடம் பிடித்தார்.

இதன் மூலம், அடுத்த மாதம், மஹாராஸ்டிரா மாநிலத்தில் நடக்க உள்ள, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில் பங்கேற்க, இருவரும் தேர்வாகியுள்ளனர்.

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான இருவரையும், பயிற்சியாளர்கள் அப்துல் ரஹீம், தருண்குமார் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us