/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2025 02:48 AM

கும்மிடிப்பூண்டி, :கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீகலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்தன.
பள்ளியின் முதல்வர் டாக்டர். திருஞானம் தலைமையில் நடந்த நிகழ்வில், கும்மிடிப்பூண்டி தேர்தல் துணை தாசில்தார் தேன்மொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்து கொண்டனர். தொடர்ந்து, 400 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளியில் துவங்கிய பேரணி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி முழுதும் சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. பேரணியின் போது, பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

