ADDED : ஏப் 24, 2025 10:00 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மே 5ம் தேதி ஏழு மையங்களில் 'நீட்' தேர்வு நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுதும் நீட் தேர்வு, வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி விமானப்படை நிலையம், ராணுவ ஊர்தி மைய தளம், சி.ஆர்.பி.,எப்., ஆகிய இடங்களில் உள்ள பி.எம். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடக்கிறது.
மேலும், மணவாளநகர் கே.இ.என்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவடி விஜயந்தா மேல்நிலைப் பள்ளி, பட்டரைபெரும்புதுார் சட்டக்கல்லுாரி, ஆவடி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய ஏழு மையங்களில் தேர்வு நடக்கிறது.
தேர்வின் போது, தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

