/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பி உரசி 'நீட்' பயிற்சி மாணவர் பலி
/
மின்கம்பி உரசி 'நீட்' பயிற்சி மாணவர் பலி
ADDED : ஜன 15, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: திருவொற்றியூர், ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதார்ஸ், 26; தி.நகரில் உள்ள தனியார் மையத்தில், 'நீட்' பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
நேற்று காலை, மின்சார ரயில் மார்க்கமாக தி.நகர் செல்வதற்காக திருவொற்றியூர் ரயில் நிலையம் சென்றார். அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்றிருந்தது.
மறுபுறம், சென்ட்ரல் போகும் மின்சார ரயில் வந்து விட்டதால், அவசரத்தில் சரக்கு ரயில் மீது ஏறி, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, உயர் அழுத்த மின் கம்பியில் அவரது தோள் பை சிக்கி, தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.