/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொத்துாரில் நுாலகம் திறப்பதில் அலட்சியம்
/
கொத்துாரில் நுாலகம் திறப்பதில் அலட்சியம்
ADDED : நவ 25, 2024 02:38 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சிக்குட்பட்ட கொத்துார் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே, திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில் ஊர்புற நுாலகம் இயங்கி வருகிறது.
இந்த நுாலகம் காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை இயங்குகிறது. இந்த நுாலகத்தில், பல ஆயிரக் கணக்கான நுால்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கான பாடப் புத்தகங்கள் தினசரி நாளிதழ்கள் உள்ளன. இதனால் வாசகர்கள் அதிகளவில் வந்து படித்து செல்வதாக கூறப்படுகிறது.
வாரத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஊர்புற நுாலகத்திற்கு விடுமுறையாகும். மீதமுள்ள நாட்களில் மேற்கண்ட நேரப்படி நுாலகம் இயங்கி வந்தது. கடந்த சில நாட்களாக நுாலகம் சரியாக திறக்காமல் பூட்டியே கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், ஊர்புற நுாலகத்தை தினசரி திறந்து வாசகர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.