/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதான மின்மாற்றியை சீரமைப்பதில் அலட்சியம்
/
பழுதான மின்மாற்றியை சீரமைப்பதில் அலட்சியம்
ADDED : நவ 24, 2024 08:21 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் செருக்கனுார் மதுரா ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செல்லும் நந்தி ஆற்றின் அருகே, எஸ்.எஸ்.2, 110 கி.வோ., மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து, 25க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், சாமந்திபுரம் பங்களா பகுதியில் உள்ள வீடுகள், குடிநீர் வழங்கும் ஆழ்துளை மின்மோட்டாருக்கும் இணைப்பு வழங்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த, 15 நாட்களுக்கு முன் மின்மாற்றி திடீரென பழுதானது. இதுவரை மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்காததால் விவசாயிகள் தங்களது மின்மோட்டார்கள் இயக்க முடியாமல் உள்ளனர்.
மேலும் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியாததால் பயிர்கள் கருகி வருகின்றன.
விவசாயிகள் மின்மாற்றியை சீரமைத்து தர வேண்டும் என, பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.
புதிய மின்மாற்றி தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வருவதற்கும், மின்மாற்றி பொருத்தவும், செலவாகும் பணத்தை கொடுத்தால் தான் மின்மாற்றி பொருத்தமுடியும் என மின்வாரிய அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய மின்மாற்றி பொருத்தி பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.