/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் சாலை பணியில் அலட்சியம்
/
ஊத்துக்கோட்டையில் சாலை பணியில் அலட்சியம்
ADDED : நவ 22, 2024 01:27 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை சாவடித்தெரு வழியே, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு வேளாண்மை அலுவலகம் மற்றும் கிடங்கு, சார்பதிவாளர் அலுவலகம், அரசு நிதிஉதவி பெறும் கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் மற்றும், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
போக்குவரத்து மிகுந்த இந்த சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, '108' ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் செல்லும் நோயாளிகள் கஷ்டப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 20 லட்ச ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
சாலைப் பணியின் போது தடுப்புகள் அமைக்காமல் மாலை நேரத்தில் அவசர கதியில் சாலை அமைத்ததால், திடீரென அவ்வழியே பைக்குகள், மாடுகள் சென்றதால், சிமென்ட் சாலை அலங்கோலமானது. இதை உடனடியாக சீர்படுத்தாததால், மேடு, பள்ளமாக மாறியது.
மாவட்ட கலெக்டர் அலட்சிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.