/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
50 அடி உயரத்தில் இருந்து விழுந்த நேபாளம் வாலிபர்
/
50 அடி உயரத்தில் இருந்து விழுந்த நேபாளம் வாலிபர்
ADDED : ஜூலை 24, 2025 02:15 AM

செங்குன்றம்:செங்குன்றத்தில், 50 அடி உயர மாடியில் இருந்து தவறி விழுந்த நேபாளம் வாலிபர், காயங்களுடன் மீட்கப்பட்டார்.
செங்குன்றம் சந்தை அருகே உள்ள 'ரங்கன்' மளிகை கடையில், நேபாளத்தைச் சேர்ந்த ரோஷன், 21, உள்ளிட்ட பலர் வேலை செய்து வருகின்றனர்.
கடையின் 3வது மாடியில், ரோஷன் உள்ளிட்ட பணியாட்கள் தங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் மொபைல்போனில் பேசியபடியே நடந்து கொண்டிருந்த ரோஷன், நிலைதடுமாறி 50 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள மற்றொரு கட்டடத்தின் இடைவெளியில் விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, செங்குன்றம் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், ரோஷனை மீட்டனர். பலத்த காயமடைந்தவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தற்செயலான விபத்தா அல்லது யாராவது தள்ளி விட்டு கொலை முயற்சி நடந்ததா என, செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.