ADDED : ஏப் 17, 2026 02:46 AM
அ நிறம் | அளவு
பொதட்டூர்பேட்டை: சித்தப்பாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த சி.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் காதர் பாஷா, 55. இவருக்கும், இவரது அண்ணன் மஞ்சு மகபூல் மகன்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று காதர் பாஷாவின் வீட்டிற்கு வந்த மஞ்சு மகபூல் மகன்கள் சுபான், 34, ஒலி, 27, ஆகியோர், காதர் பாஷாவை தரக்குறைவாக பேசி தகராறு செய்துள்ளனர்.
பின், காதர்பாஷாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, பொதட்டூர்பேட்டை போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
