தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பேனா கத்தியால் குத்திய இருவருக்கு வலை

பேனா கத்தியால் குத்திய இருவருக்கு வலை

பேனா கத்தியால் குத்திய இருவருக்கு வலை


ADDED : நவ 07, 2024 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கனகம்மாசத்திரம்:பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மதன் 39. இவர் நேற்று முன்தினம் மதியம் அதே கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான குடோனில் சிமென்ட் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் 30 என்பவர் என்னை கேட்காமல் குடோனில் எப்படி சிமென்ட் மூட்டைகளை அடுக்குகிறாய் என கேட்டதோடு கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின் அன்று மாலை மதன் வீட்டில் இருந்த போது கமலக்கண்ணன் மற்றும் அவரது அண்ணன் மகன் 17 வயதுடைய சிறுவன் இருவரும் வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கமலக்கண்ணன் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மதனின் நெற்றி மற்றும் கை பகுதியில் கிழித்தார்.

இதில் பலத்த காயமடைந்த மதனை மீட்ட உறவினர்கள் கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே வாலிபர் ஒருவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணியரை தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் சில பயணிகளிடம் கத்தி காட்டி மிரட்டி வந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்தனர்.

விசாரணையில், திருத்தணி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அசாம்முகமத், 24 என தெரியவந்தது. போலீசார் அசாம்முகமதை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us