/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலஞ்சேரி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
/
வேலஞ்சேரி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
ADDED : பிப் 23, 2025 01:23 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
போதிய வகுப்பறை கட்டடம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ், 2.83 கோடி ரூபாயில், 12 வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டது.
பின், ஒன்றரை மாதத்திற்கு முன் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வசதிக்காக, தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்கு கொண்ட, 12 வகுப்பறைகள், மாணவ - மாணவியர் தனித்தனி கழிப்பறை, மாற்றுத்திறனாளி கழிப்பறை நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டடத்தை நேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, வீடியோ காவ்பரன்சிஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பள்ளிக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ரீச்சல்பிரபாவதி, திருத்தணி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முரளி, எஸ்.எஸ்.ஏ., வட்டார மேற்பார்வையாளர் சிவகுமார் உட்பட ஆசிரியர், கிராமத்தினர் பங்கேற்றனர்.