தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் 6 மாதங்களுக்கு பின் புது ரேஷன் கார்டுகள் வினியோகம்

திருத்தணியில் 6 மாதங்களுக்கு பின் புது ரேஷன் கார்டுகள் வினியோகம்

திருத்தணியில் 6 மாதங்களுக்கு பின் புது ரேஷன் கார்டுகள் வினியோகம்


UPDATED : ஜூன் 23, 2026 06:13 PM

ADDED : ஜூன் 23, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2026 06:13 PM ADDED : ஜூன் 23, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி தாலுகாவில், கடந்த ஆறு மாதங்களுக்கு பின், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

திருத்தணி தாலுகாவில், மொத்தம் 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், புதிய ரேஷன் கார்டு வழங்கக்கோரி, கடந்தாண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் வரை, 1,300க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

சட்டசபை தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் காலதாமதம் ஆனது.

இந்நிலையில், புதிய அரசு அமைந்துள்ளதால், வட்ட வழங்கல் அலுவலர் விஜயா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த பயனாளிகள் வீட்டிற்கு நேரில் சென்று, விசாரணை நடத்தி, தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்தனர்.

இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு பின், கடந்த ஒரு வாரமாக, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து, வட்ட வழங்கல் அலுவலர் விஜயா கூறியதாவது:

கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை விண்ணப்பித்த, 700க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

பயனாளிகளின் மொபைல் போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பி, ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பித்துள்ள மீதமுள்ளவர்களுக்கும், விரைவில் விசாரணை நடத்தி, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us