/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர் விபத்து எதிரொலி புதிய வேகத்தடை அகற்றம்
/
தொடர் விபத்து எதிரொலி புதிய வேகத்தடை அகற்றம்
ADDED : நவ 03, 2024 01:59 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஆதிவராகபுரம் கிராமத்தினர் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு தினசரி சென்று வருகின்றனர்.
ஆதிவராகபுரத்தில் இருந்து சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை வரை இணைப்பு சாலை வசதி உள்ளது. இந்த இணைப்பு சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், மாநில நெடுஞ்சாலையுடன் கிராம சாலை இணையும் பகுதியில், சமீபத்தில் வேகத்தடை ஏற்படுத்தப்பட்டது. இதற்கான எச்சரிக்கை பதாகையும் நிறுவப்பட்டது.
ஆனால், வேகத்தடையை எச்சரிக்கும் விதமாக சாலையில் ஏற்படுத்தப்படும் சிறிய அளவிலான தடைகள் ஏற்படுத்தப்படாததால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து, அந்த வேகத்தடை உடனடியாக அகற்றப்பட்டது.
ஆனால், வேகத்தடை உள்ளது என்பதற்கான எச்சரிக்கை பதாகை மட்டும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகனஓட்டிகள் குழப்பத்துடன் வாகனங்களை செலுத்தி வருகின்றனர்.
சரியான திட்டமிடலுடன் வேகத்தடையை அமைக்க வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.