ADDED : பிப் 15, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது, பாட்டைகுப்பம் மீனவ கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ரேஷன் பொருட்கள் பெற, ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வந்தனர்.
ஆரம்பாக்கம் கடையில் குடும்ப அட்டை அதிகரித்ததாலும், இப்பகுதியினரின் சிரமம் கருதியும், பாட்டைகுப்பம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, பாட்டைகுப்பம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில், பகுதிநேர ரேஷன் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் நேற்று ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் வினியோகத்தை துவக்கி வைத்தார்.

