/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செய்தி எதிரொலி விளையாட்டு மைதானம் பழையனுாரில் சீரமைப்பு
/
செய்தி எதிரொலி விளையாட்டு மைதானம் பழையனுாரில் சீரமைப்பு
செய்தி எதிரொலி விளையாட்டு மைதானம் பழையனுாரில் சீரமைப்பு
செய்தி எதிரொலி விளையாட்டு மைதானம் பழையனுாரில் சீரமைப்பு
ADDED : நவ 22, 2024 01:01 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்டது பழையனூர் ஊராட்சி. இங்கு, மணவூர் செல்லும் சாலையில், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், 2019 ---- 20 ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வாயிலாக 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் மற்றும் இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஓராண்டாக இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாத நிலையில் துருப்பிடித்து உள்ளது. மேலும் மைதானத்தில் செடி முளைத்து புதராக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து நம்நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து புதராக காட்சியளித்த விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது.