UPDATED : மே 14, 2026 03:55 PM
ADDED : மே 14, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.எஸ்.ராமாபுரம் கிராமத்தில், 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, ஊரக வளர்ச்சி துறை சார்பில் டிராக்டர் மூலம் ஜே.எஸ்.ராமாபுரம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
