ADDED : டிச 21, 2025 05:32 AM

ரயில் நிலையங்களில்
சாலையை
சீரமைக்க 'டெண்டர்'
சென்னை: சென்னை ரயில் கோட்டத்தில், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம்; ஆந்திரா மாநிலம் தடா, போளிரெட்டிபாளையம், துாரவாரிசத்ரம் ரயில் நிலையங்களின் நுழைவு சாலை, சுற்றுப்புற சாலைகளை சீரமைக்க, 2 கோடி ரூபாய்க்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் துவங்கும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறினர்.
காளான் வளர்க்க
26ம் தேதி பயிற்சி
கிண்டி: கிண்டி திரு.வி.க., தொழிற்போட்டை எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 26ம் தேதி, காளான் வளர்ப்பு குறித்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் பயிற்சி அளி க்க உள்ளனர்.
பங்கேற்க விரும்புவோர், 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும் என, வேளாண் பல்கலை பயிற்சி மைய தலைவர் அசோகன் தெரிவித்துள்ளார்.
போதை பொருள் விழிப்புணர்வு
சென்னை: அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு 'சைக்கிள் பேரணி' நேற்று நடந்தது. அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்த இப்பேரணியில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்பேரணியை அண்ணாநகர் எம்.எல்.ஏ.,மோகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், போக்குவரத்து உதவி கமிஷனர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

