ADDED : ஜன 21, 2020 12:17 AM
அ நிறம் | அளவு
கூவம்: கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கூவம் கிராமத்தில் உள்ளது நாராயண விநாயகர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளதால், நேற்று, பாலாலயம் நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று, காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் ஏகாதசி திதி, அனுஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் பாலாலயம் நடந்தது.அதை தொடர்ந்து, பாலாலயத்தை முன்னிட்டு யாக பூஜை நடந்தது. இதில், கூவம் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
