/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலைய வளாகத்தில் ‛நோ பார்க்கிங்' பலகைகள்
/
பேருந்து நிலைய வளாகத்தில் ‛நோ பார்க்கிங்' பலகைகள்
ADDED : டிச 08, 2024 02:52 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், 1.30 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலைய வளாகம் அமைந்துள்ளது. அதை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையமும், அதை ஒட்டிய, 30 செண்ட் நிலம், காலியாக இருந்தது.
அந்த இடத்தில், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு வரும் தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் அகற்றப்பட்ட சாலையோர கடைகளுக்கு மேற்கண்ட, 30 செண்ட் இடத்தை ஒதுக்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக, அந்த இடத்தை சுத்தம் செய்து, சாலையோர கடைகளுக்கு ஒதுக்கும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த இடத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க, நேற்று, பேருந்து நிலைய வளாகம் மற்றும் சாலையோர கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ‛நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.
அதில், 'பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தக்கூடாது, மீறினால், அபராதம் விதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை கண்காணித்து அபராதம் விதிக்கும் வேலையில் பேரூராட்சி ஊழியர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.