/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா எப்போது?
/
ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா எப்போது?
ADDED : ஏப் 20, 2025 01:05 AM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரேஸ்புரம், வேணுகோபாலபுரம் கிராமங்களில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இம்மக்களின் தேவைக்காக, ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, 2024 --- 2025ம் ஆண்டுக்கான, திருவள்ளூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நியாய விலை கட்டடம் கட்டப்பட்டது.
அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நியாய விலை கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்புக்காக காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, அனைத்து பணிகளும் முடிவுற்று, மின் வசதியின்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ள புதிய நியாய விலை கடையை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

