/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழையனுாரில் பயன்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டம்
/
பழையனுாரில் பயன்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டம்
ADDED : அக் 18, 2024 02:44 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் ஊராட்சியில் மணவூர் -- திருவாலங்காடு சாலையில் அமைந்துள்ளது குப்பை கிடங்கு.இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து எரியூட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம் வாயிலாக கொட்டகை அமைத்து குப்பை தரம்பிரித்து எரியூட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக இத்திட்டம் கிராமத்தில் முறையாக செயல்படுத்தாததால், கொட்டகை பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிராமத்தில் செயல்படாமல் மூடுவிழா காணும் நிலையில் உள்ளது.
எனவே திட்டத்தை முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.