/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரிவாள், கத்தி தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்
/
அரிவாள், கத்தி தயாரிப்பில் வடமாநில தொழிலாளர்கள்
ADDED : நவ 16, 2025 02:25 AM

திருவள்ளூர்: வடமாநில தொழிலாளர்கள் திருவள்ளூரில் முகாமிட்டு, அரிவாள், கத்தி, கோடரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, சிறுவானுார் கண்டிகையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், சாலையோரம் பட்டறை அமைத்து, இரும்பை காய்ச்சி, சம்மட்டியால் அடித்து, கத்தி, அரிவாள், அரிவாள்மனை, கோடரி போன்றவற்றை தயாரித்து வருகின்றனர்.
அவற்றை சாலையோரம் விற்பனைக்கு வைத்துள்ளனர். அவற்றின் வடிவமைப்பு, தரத்திற்கு ஏற்ப, 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறியதாவது:
நாங்கள் 15 பேர் ஒரே குடும்பமாக, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஊராக சென்று, இரும்பை காய்ச்சி, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை, மக்கள் பார்க்கும் வகையில் தயாரித்து விற்பனை செய்கிறோம்.
தற்போது, திருவள்ளூர் மாவட்டம், சிறுவானுார் கண்டிகையில் முகாமிட்டு, ஒரு வாரமாக இரும்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களில் சிலர், நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை, இருசக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று, நகர் பகுதிகளில் வீடு, வீடாக விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

