/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ்சில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
/
பஸ்சில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
ADDED : டிச 24, 2024 12:17 AM
திருத்தணி,
ஆந்திராவில் இருந்து, திருத்தணி வழியாக, சென்னை, வேலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பாக, தமிழக அரசு பேருந்துகள் வாயிலாக கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திரா எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் அரசு பேருந்து எண், 201 என்ற பேருந்தை பொன்பாடி சோதனைச்சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியிடம், 7 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தி வந்தவர், பீஹார் மாநிலம், மதுபானி மாவட்டம், சந்துர்புஜ்ஜி பிப்பாரி கிராமத்தைச் சேர்ந்த சிவாசதய், 21, என, விசாரணையில் தெரிய வந்தது. அதை தொடர்ந்து சிவாசதய்யை திருத்தணி போலீசார் கைது செய்தனர்.