/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை ஆக்கிரமித்து கடைகள்: அகற்ற நெ.சா.துறை நோட்டீஸ்
/
சாலையை ஆக்கிரமித்து கடைகள்: அகற்ற நெ.சா.துறை நோட்டீஸ்
சாலையை ஆக்கிரமித்து கடைகள்: அகற்ற நெ.சா.துறை நோட்டீஸ்
சாலையை ஆக்கிரமித்து கடைகள்: அகற்ற நெ.சா.துறை நோட்டீஸ்
ADDED : டிச 21, 2025 04:29 AM
பொன்னேரி: பொன்னேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்துவதற்காக, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகளுக்கு, நெடுஞ்சாலை துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பொன்னேரி - பழவேற்காடு சாலை, அரிஅரன் பஜார் பகுதியில் தள்ளுவண்டி மற்றும் நடைபாதை கடைகள் என, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவை, சாலையோரங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. தள்ளுவண்டிகளில் துரித உணவுகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சாலையை மறித்து கொள்ளவதுடன், வாகனங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.
இதனால், பொன்னேரி பகுதியில் காலை - மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள், மருத்துவமனை செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, தற்போது பொன்னேரி நெடுஞ்சாலை துறை, சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதுதொடர்பாக, சாலையோர கடை வியாபாரிகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை தாமாக முன்வந்து உடனே அகற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி, தொடர்ந்து அங்கு செயல்படும் சாலையோர கடைகள், நாளை அகற்றப்படும் என, நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

