ADDED : ஜூலை 25, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்காலில் நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியில், சாந்தமலை அடிவாரத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், மரக்கன்று நாற்றங்கால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய ஆடி பட்டத்தில், புளியங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது வளர்ந்துள்ளபுளியங்கன்றுகளை, தனியாக பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றி நடவு செய்யப்பட்டு வருகின்றன.
விரைவில் இந்த மரக்கன்றுகள் ஒன்றியத்தின் பல்வேறு பகுதியில் நடவு செய்யப்பட உள்ளன.