/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நர்சிங் மாணவர்களுக்கு 'தாட்கோ' மூலமாக வேலை வாய்ப்பு பயிற்சி
/
நர்சிங் மாணவர்களுக்கு 'தாட்கோ' மூலமாக வேலை வாய்ப்பு பயிற்சி
நர்சிங் மாணவர்களுக்கு 'தாட்கோ' மூலமாக வேலை வாய்ப்பு பயிற்சி
நர்சிங் மாணவர்களுக்கு 'தாட்கோ' மூலமாக வேலை வாய்ப்பு பயிற்சி
ADDED : ஜன 01, 2026 04:45 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 'தாட்கோ' மூலம் நர்சிங் மாணவர்களுக்கு, இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர், சென்னை மாவட்ட மாணவர்களுக்கு, 'தாட்கோ மற்றும் அப்பல்லோ மெட் ஸ்கில்ஸ்' நிறுவனம் இணைந்து, இளங்கலை நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி, முதல் இரண்டு வாரங்களில் இணையவழி கற்றல் முறையிலும், அடுத்த நான்கு வாரங்களுக்கு அப்பல்லோ மருத்துவமனைகள் அல்லது அருகே உள்ள அப்பல்லோ தொடர்புடைய பிற மருத்துவமனைகளில் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியின்போது மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இப்பயிற்சியை பெற 2022 - 25ம் ஆண்டுகளில், இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணவர்கள் அல்லது கல்லுாரி இறுதியாண்டு படித்து வரும் 20 - 25 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியை பெற, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான செலவுகளை, 'தாட்கோ' ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

