/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரை ஒதுங்கிய ஒடிசா மாநில படகு பழவேற்காடு மீனவர்களிடம் பரபரப்பு
/
கரை ஒதுங்கிய ஒடிசா மாநில படகு பழவேற்காடு மீனவர்களிடம் பரபரப்பு
கரை ஒதுங்கிய ஒடிசா மாநில படகு பழவேற்காடு மீனவர்களிடம் பரபரப்பு
கரை ஒதுங்கிய ஒடிசா மாநில படகு பழவேற்காடு மீனவர்களிடம் பரபரப்பு
ADDED : நவ 19, 2025 05:26 AM

பழவேற்காடு: பழவேற்காடில் ஒடிசா மாநில மரப்படகு கரை ஒதுங்கியதால், மீனவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பழவேற்காடில் இரு நாட்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. நேற்று, வைரவன்குப்பம் கடற்கரை அருகே, ஆளில்லாமல் படகு ஒன்று கடல் நீரில் அடித்து வரப்படுவதை மீனவர்கள் கண்டனர்.
உடனடியாக, அவர்கள் கடலுக்கு சென்று, அலையில் அடித்து வரப்பட்ட படகை கட்டி இழுத்து, கரைக்கு கொண்டு வந்தனர்.
அந்த படகு மரத்தால் செய்யப்பட்டு மோட்டார் இல்லாமல், ஆங்காங்கே சேதமடைந்து இருந்தது. அதிலுள்ள பதிவு எண்ணை கொண்டு, கரை ஒதுங்கிய படகு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தது என தெரிந்தது.
மீன்பிடிக்க வந்த ஒடிசா மாநில மீனவர்க ளின் படகா அல்லது புயல் காற்றில் கடலில் அடித்து செல்லப்பட்டு, காற்று திசையில் பழவேற்காடில் கரை ஒதுங்கியதா என, மீன்வளத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆளில்லாத மரப்படகு ஒன்று பழவேற்காடு மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.