/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவானியம்மன் கோவிலில் மங்கள பொருட்கள் வழங்கல்
/
பவானியம்மன் கோவிலில் மங்கள பொருட்கள் வழங்கல்
ADDED : ஜூலை 21, 2025 03:32 AM

ஊத்துக்கோட்டை::பவானியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் மற்றும் மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோவில்கள் விழாக் கோலம் பூண்டு விடும். அந்த வகையில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை விழா சிறப்பாக நடந்தது. நேற்று கிருத்திகை நாள் என்பதால், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
இக்கோவிலில் பக்தர்களுக்கு கூழ்வார்த்தல், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கோவிலில், 159.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.