/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூர் பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு
/
பொதட்டூர் பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 12, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை, : பொதட்டூர்பேட்டை பணிமனையில் இருந்து பெரு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக, நகர பேருந்துகளுக்கு மட்டுமே இந்த பணிமனையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் புண்ணியமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை பொதட்டூர்பேட்டை பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பணிமனையின் பழுது நீக்கும் பிரிவு, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்தனர்.

