/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்
/
நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : அக் 08, 2025 02:39 AM

திருத்தணி:கே.ஜி.கண்டிகையில் இயங்கி வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியத்தில் திருத்தணி, வேலஞ்சேரி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய மூன்று இடங்களில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த கொள்முதல் நிலையங்களுக்கு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் எடுக்காமல் தாமதம் செய்கின்றனர்.
இதனால் விவசாயிகள், லாரிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன.
இரண்டு - மூன்று நாட்கள் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வாடகை செலவாகிறது.
மழையில் மூட்டைகள் நனைந்தால், நெல் முளைத்துவிடும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, கே.ஜி.கண்டிகை கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் திறந்தவெளியிலும், சமுதாய கூடத்தின் வெளியேயும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து, கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டால், அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை, உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.