நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், சிப்காட் போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சிப்காட் போலீசில் பல குற்ற வழக்குகள் தொடர்பாக இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்ட, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ், 33, என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவரை நிறுத்தி விசாரித்த போது தப்பிக்க முயன்ற நிலையில், போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

