ADDED : நவ 01, 2024 07:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி- - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடப்பதாக, திருத்தணி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூதாட்டி உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.