ADDED : செப் 22, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை அடுத்த கண்டவாரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கங்கைய்யா மனைவி அமராவதி, 67.
இவர், நேற்று முன்தினம் திருத்தணியில் இருந்து அரசு பேருந்து தடம் எண்: டி 63ல் வீடு திரும்பினார். ஈச்சந்தோப்பு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று மோதியதில் படுகாயம் அடைந்தார்.
உடன், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து, பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.