/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி
/
ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி
ADDED : நவ 26, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணவாளநகர் : கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது பாட்ஷா, 76. இவர் நேற்று முன்தினம் காலை இப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் இவரை தேடி சென்ற போதுஏரியில் தவறி விழுந்து பலியானது தெரிந்தது.
மணவாளநகர்போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.

