ADDED : ஜூன் 07, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்த ணி அடுத்த அருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா, 23. இவருக்கும், அதே பகுதி சேர்ந்த ஜெயகுமார், 22, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நி லையில், நேற்று விஷ்வா தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஜெயகுமார் வழிமறித்து, தகராறு செய்து, கை யால் அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, விஷ்வா கொடுத்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயகுமாரை கைது செய்தனர்.
