ADDED : நவ 19, 2024 07:14 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பகுதியில், சந்தேகப்படும்படி, பையுடன் ஒருவர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார், அந்த நபரை சோதனையிட்டனர்.
அவரிடம், 18.5 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர், உத்தர பிரேதசத்தைச் சேர்ந்த துளசிராம், 28, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
