/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிராக்டர்- பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி
/
டிராக்டர்- பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி
ADDED : நவ 14, 2024 10:06 PM
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டுபள்ளியில் வசித்தவர் ஜெய்சங்கர், 51. அதே பகுதியை சேர்ந்தவர் மகேஷ், 31. இருவரும் எண்ணுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் ஹீரோ ஸ்பெளண்டர் பிளஸ் வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். மகேஷ் ஓட்டி சென்றார்.
காட்டுப்பள்ளி அருகே எதிரே வந்த டிராக்டர் ஒன்று அவர்கள் மீது மோதியதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ஜெய்சங்கர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மகேஷ், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.