/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரமாரியாக தாக்கியதில் ஒருவர் பலி
/
சரமாரியாக தாக்கியதில் ஒருவர் பலி
ADDED : செப் 20, 2024 08:00 PM
ஆர்.கே.பேட்டை:சின்ன நாகபூண்டி, படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15ம் தேதி நடந்தது. அப்போது, சின்ன நாகபூண்டியை சேர்ந்த சேகர், 54, என்பவர் அங்கு இருந்தார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன், 55, அவரது மகன்கள் சதீஷ், 34, சுரேஷ், 32, ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.
சேகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். வீட்டிற்கு திரும்பிய சேகர், பின் வயிற்று வலி தாங்க முடியாமல், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் கொலை மிரட்டல் வழக்காக பதியப்பட்ட இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
இதன் பேரில், முருகேசன் மற்றும் அவரது மகன்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.